சுஷாந்த் சிங்கின் தங்கை ரியா சக்ரபர்த்தியை என்ன கூறியுள்ளார் பாருங்கள்.

0

தோனி பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரின் பெற்றோர்கள் சுஷாந்த் தற்கொலைக்கு அவர் காதலி ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என அவரின் மீது போலீசில் புகார் அளித்தனர்.

எனவே அதற்காக நேற்றைய முன்தினம் சிபிஐ அவர்கள் ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் சுஷாந்த் சிங்கின் குடும்பம் அவரை கைவிட்டதால் அவர் போதைக்கு அடிமையாகி இருந்தார்.அதிலிருந்து மீள தான் அவருக்கு உதவியதாகவும் அவர் நேற்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் அண்ணன் இறந்த பிறகும் தொலைக்காட்சிப் பேட்டியில் அவரின் பெயரை கெடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம். கடவுள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் உங்களுக்கு கொடுக்கும் தண்டனையை நான் பார்க்கத்தான் விரும்புகிறேன்.

என் அண்ணனின் உடல்நிலை சரியில்லாத என தெரிந்தவுடன் அமெரிக்காவிலிருந்து குழந்தை வேலையை விட்டுவிட்டு நாங்கள் இங்கே வந்தோம்.

என் அண்ணன் அந்த பொண்ணை பார்த்து இருக்கவே கூடாது. எப்படி ஒருவர் அனுமதி இல்லாமல் அவருக்கு போதை பொருளை கொடுத்து பின்பு அவரைக் கொன்றுவிட்டால் என கூறியுள்ளார்.