பாலிவுட் நடிகையே பட்டு புடவையில் வரும்போது கோயம்பத்தூர் பொண்ணுக்கு அளபறைய பாரு..! தர்ஷா குப்தாவை பங்கம் செய்த சதீஷ்..!

0
dharsha-kupta
dharsha-kupta

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருவது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பலரும் தற்பொழுது சினிமாவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சந்தானம் முதல் ப்ரியா பவானி சங்கர் முதல் அனைவருமே இந்த விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள் என்றே சொல்லலாம் அந்த வகையில் நடிகை தர்ஷகுப்தா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது பிரபல தனியா தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களில் நடித்து புகழ்பெற்றது மட்டும் இல்லாமல் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நமது நடிகை பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் சதீஷ் அவர்கள் பணியாற்றி வருகிறார். அதேபோல தர்ஷகுப்தாவும் பல்வேறு பொது நிகழ்ச்சியில் முகம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்குபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் அவர் பாலிவுட் நடிகை என்பதன் காரணமாக அவர் கண்டிப்பாக மாடன் உடையில் வந்திருப்பார் ஆகையால் அவருக்கு தகுந்தார் போல் நாமும் பிரமாண்ட உடலில் வரவேண்டும் என்ற காரணத்தினால் தர்ஷகுப்தா மிகவும் பிரம்மாண்டமாக வந்திருந்தார்.

ஆனால் நடிகை சன்னி லியோன் அவர்கள் பட்டுப்புடவை அணிந்து வந்தது தர்ஷா குப்தாவுக்கு பல்பு கொடுத்தது போல் ஆகிவிட்டது இதனை சதீஷிடம் அவர் கூறியதாகவும் இதனை நீங்களே மேடையில் கூட சொல்லலாம் என தர்ஷா கூறியதாக சதீஷ் கூறியிருந்தார்.

அந்த வகையில் மேடையில் சதீஷ் அவர்கள் பாலிவுட் நடிகையே பட்டுப் புடவையில் வரும் பொழுது கோயம்புத்தூர் பொண்ணு என்னமா சீன் காட்றாங்க என்று அவர் கூறியது சமுக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது அதுமட்டுமில்லாமல் தர்ஷகுப்த்தா தற்பொழுது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் அப்படி அவரிடம் கூற சொல்லவில்லை அவர் அவ்வாறு கூறியது எனக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்று பதில் கூறியுள்ளார்.