சினிமாவை விட்டு விலகுவது பற்றி அஜித்.. உண்மையை பகிர்ந்த பிரபலம்

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித் இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ரசிகர் மன்றம் இல்லாமலேயே பெற்றுள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்கள் ஆவார்.

சினிமா பிரபலங்கள் பேட்டி கொடுக்கும்போது அஜித்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள் அப்படி தான் லொள்ளு சபா சாமிநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி பேசியுள்ளார் அதாவது சாமிநாதன் விவேகம் படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.

விவேகம் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அஜித் அவரை அழைத்து எவ்வளவு திரைப்படங்களில் நடித்திருக்கிறீர்கள் என விசாரித்தார் அதற்கு அவர் நான் 500 திரைப்படங்களில் நடித்து இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். அதற்கு அஜித் நான் விரைவில் சினிமாவை விட்டு விலகி விடுவேன் மக்கள் இவன் வேண்டாமென முடிவு செய்வதற்குள் நாமே விலகிக் கொள்ளவேண்டும் என கூறியுள்ளார் அஜீத்.

அதற்கு சாமிநாதன் சார் அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க உங்களின் படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment