லியோ படத்திற்கு லோகேஷ் போடும் பக்கா பிளான்.! விக்ரம் படத்திலிருந்து களமிறங்கும் பிரபலம்…

விக்ரம், கைதி திரைப்படம் போல லியோ திரைப்படம் LCU-வில் இணைகிறதா என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒரு சில தகவலின் அடிப்படையில்  லியோ LCU-வில் இணைகிறது என்று கூறபடுகிறது. ஆனால் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால் தற்போது ஒரு சில தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது இந்த திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் விக்ரம் படத்தில் நடித்த அமீர் கதாபாத்திரம் மற்றும் விக்ரம் கதாபாத்திரம் இடம் பெறும் என சில தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அதன் அடிப்படையில் லியோ திரைப்படம் LCU-வில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக சில தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் கலை இயக்குனர் சதீஷ்குமார் அவர்கள் தீ ஈகிள் இஸ் கம்மிங் என்ற வசனத்தை பதிவிட்டு கழுகு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் இதனால் இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் விக்ரம் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலைக் குறித்துதான் கமல் நடிக்க வரும் நிலையில் இந்தப் பாடலை பதிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ரசிசர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதற்கு முன்பு லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் லியோ திரைப்படத்தில் விக்ரம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை விட தனுஷ் அவர்கள் டபுள் மடங்கு வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டால் மட்டும் தான் இது உண்மையா இல்லையா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment