அட்ட காப்பி அடித்துள்ள லோகேஷ்.! மாஸ்டரில் விஜயின் கதாபாத்திரம் இந்த திரைப்படத்திலிருந்து தான் சுடப்பட்டது… அடேங்கப்பா இது உலக மகா ஆட்டையாட..

இளம் இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்துக்கின்றனர் அந்த வகையில் அட்லீ, நெல்சன், வினோத்  ஆகியோர்களை தொடர்ந்து அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளவர் தான் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதலில் “மாநகரம்” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் எடுத்த கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க விஜய் கைகோர்த்து “லியோ” என்னும் படத்தை பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, கௌதம் வாசுதேவ் மேனன்..

மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் குறித்து பல தகவல்கள் வெளி வருகின்றன. அதில் ஒன்று ஹாலிவுட் படத்திலிருந்து ஒரு சில நல்ல கதாபாத்திரங்களை காப்பி அடித்து படத்தை எடுத்து வருவதாக பல கிசுகிசுக்கள் கிளம்புகின்றன..

அதுபோல ஒரு தகவல் வைரல் ஆகியுள்ளது மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரம் ஹாலிவுட் படத்தின் காப்பி என பலரும் கூறி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளியான திரைப்படம் the professor படத்தில் ஜானகி டெப்த் ஒரு கல்லூரியில் வேலை செய்யும் professor முழுநேர குடிகாரனாக அதில் நடித்திருப்பார்.

இந்த கதாபாத்திரத்தை அப்படியே காப்பி அடித்து மாஸ்டர் படத்தில் விஜயின் கதாபாத்திரத்திற்கு லோகேஷ் வைத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர் மாஸ்டர் படமே வேறு ஒரு படத்தின் காப்பி என்பதால் “லியோ” படத்தில் என்னென்ன நடக்கப் போகிறதோ என கூறி அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த செய்தி தான் தற்போது சமூக வலைதள பக்கத்தில் படும் வைரலாகி வருகிறது.

Leave a Comment