சொன்னதை செய்யும் லோகேஷ் – தளபதி 67 படத்தில் முக்கிய நடிகர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.

0
vijay-
vijay-

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் எல்லாம் வேற லெவலில் உருவாகி படம் ஹிட் அடித்தாலும் அப்போது லோகேஷ் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இதைத்தொடர் அடுத்து டாப் நடிகர்களில் ஒருவரான கார்த்தியை வைத்து கைதி என்னும் படத்தை எடுத்தார்.  இந்த படமும் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இயக்குனர் லோகேஷ் கேரியரில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த லோகேஷ்..

மேலும் அடுத்தடுத்த டாப் நடிகர்களை வைத்து மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை கொடுத்துள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்து விஜயை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார். விஜய் தற்போது தனது 66 வது திரைப்படம் ஆன வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்த உடன் லோகேஷ் உடன் இணைவார் என தெரிய வருகிறது.

தளபதி 67 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது அதற்கான லொகேஷன் மற்றும் நடிகர் நடிகைகளை லோகேஷ் தேர்வு செய்து வருகிறார். இந்த படத்தில் ஆறு வில்லன்கலாம் அதில் சஞ்சய்தத் மற்றும் பிரித்திவிராஜ் இரண்டு வில்லன்களாக நடிக்க உள்ளனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் வில்லனாக பல படங்களில் கலக்கி வந்த மன்சூர் அலியை வைத்து லோகேஷ் கனகராஜ்..

அவரது படத்தின் நடிக்க வைக்க மும்பரம் காட்டி வந்த நிலையில் ஒரு வழியாக தளபதி 67 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மன்சூர் அலியை நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில்  பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது