“விக்ரம்” படத்திற்காக மலையாள நடிகரை வில்லனாக மாற்றிய லோகேஷ்.! விஜய்சேதுபதி எல்லாம் இவருக்கு முன்னாடி சும்மா தூசு மாதிரி.

0

சினிமா திரை உலகில் இருக்கும் இளம் தலைமுறை இயக்குனர்கள் பலரும் தனது பிரதான நடிகரை வைத்து ஏதாவது ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது அவரது வாழ்நாள் ஆசையாக இருப்பது வழக்கம்.

அந்த வகையில் வெறும் குறைந்த திரைப்படங்களை இயக்கி தனக்கான அந்தஸ்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி, விஜயை வைத்து படங்களை இயக்கியிருந்தாலும் அத்தகைய படங்கள் ஒவ்வொன்றும் வசூல் வேட்டை நடத்தியதால் தற்போது டாப் நடிகர்களின் படங்களை இயக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனது கனவு நடிகரான உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை எடுக்க தற்போது திட்டம் தீட்டியுள்ளார் இந்த படத்திற்கு விக்ரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கமல் இந்த திரைப்படத்தில் நடிப்பார் என பலரும் எதிர்பார்க்கின்றனர் ஆனால் தற்பொழுது இவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ளதால் அவர் குறைந்தது 7,8 மாதங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் அதற்குள் விஜயுடன் மீண்டும் ஒரு திரைப் படத்தில் இணைவார் என தெரியவருகிறது அதன் பின்தான் கமலுடன் கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது.

இதற்குள் கமலுக்கு வில்லனாக பிரபல நடிகர்களை செலக்ட் செய்து வருகிறார் லோகேஷ் தற்போது விஜய்சேதுபதி மற்றும் டாப் வில்லன் நடிகர்களை எல்லோரையும் தூக்கி எறிந்து விட்டு மலையாள நடிகரான பகத் பாசில் என்பவருடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை நடிகர் பகத் பாசில் சமிபத்த பேட்டி ஒன்றில் ஓப்பனாக தெரிவித்தார் இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வேற லெவல் ஏறி உள்ளது.