கமலுக்கே நடிக்க சொல்லிக் கொடுத்த லோகேஷ்.! வியந்து போய் பார்த்த ராஜமவுலி.! வெளியான சுவாரஸ்யமான சம்பவம்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு ஒரு காட்சியை இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த சம்பவத்தை கமல் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் அதை பார்த்த ராஜமவுலி இயக்குனர் லோகேஷ் கனகராஜை வியந்து போய் பார்த்து இருக்கிறார். இதை ராஜமவுலி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவையே தூக்கி நிறுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். சிறிது இடைவேளையில் கன்னட திரைப்படங்கள் ஆவேசமாக உயர்ந்து இருந்தது அந்த சமயத்தில் தமிழ் சினிமா எல்லாம் சுத்த வேஸ்ட் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

அந்த சமயத்தில்தான் விக்ரம் திரைப்படம் வெளியானது யாரெல்லாம் தமிழ் சினிமாவைப் பற்றி கேவலமாக சொன்னார்களோ அவர்கள் வாயெல்லாம் ஒரே நொடியில் மூட வைத்தார் லோகேஷ். அந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து 500 கோடியை வாரி குவித்தார் லோகேஷ் கனகராஜ்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் கமலின் 60 ஆண்டு சினிமா வாழ்க்கையில் கிடைக்காத பேரும் புகழும் இந்த படத்தின் மூலம் அவருக்கு கிடைத்தது அந்த அளவிற்கு கமலின் ரசிகனாக விக்ரம் படத்தில் வேலை செய்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அது மட்டுமல்லாமல் விக்ரம் படத்தில் அமைந்துள்ள ஒரு காட்சியை பார்த்து ராஜமவுலியே  ஆச்சரியமாக பார்த்து வியந்து போய் இருக்கிறாராம்.

அதாவது விக்ரம் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி மட்டும் ராஜமௌலிக்கு கமலை விட லோகேஷை தான் கண்முன்னே வந்து நிறுத்தியதாம்.  அதாவது விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் ரோலக்ஸ் தனது கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த கும்பலில் கமல் இருப்பார்.

கடைசியாக அந்த கூட்டம் கலைந்து போகும் போது கமல் அவர்கள் வாயில் சுவிங்கம் மென்று கொண்டே கண்ணாடி அணிந்து படி ஒரு லுக்கை விடுவார் அந்த லுக்கை பார்க்கும் போது எனக்கு லோகேஷ் தான் கண்முன் வந்தார் என்று ரஜமௌலியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த பேட்டியில் அமர்ந்திருந்த கமல் அவர்கள் ஷூட்டிங்கில் ஒரு சில நேரத்தில் நான் சுவிங்கம் எடுத்து வருவதை மறந்து விடுவேன் ஆனால் அப்போது லோகேஷ் கனகராஜ் தான் எனக்கு சுவிங்கம் எப்படி மெல்லுவது என்று சொல்லிக் கொடுப்பார் என்று கூறியுள்ளார் கமல். அதுமட்டுமல்லாமல் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார் நடிகர் கமல். இந்த சுவாரசியமான தகவல்கள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment