லியோ படத்தை தொடர்ந்து “கைதி 2” ரிலீஸ் தேதியை லாக் செய்த லோகேஷ்.. அடுத்த சம்பவம் ஸ்டார்ட்

kaithi-
kaithi-

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட்.. கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து எடுத்த விக்ரம் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் 400 கோடிக்கு மேல அள்ளி புதிய சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து லோகேஷ், தளபதி விஜய் உடன் கைகோர்த்து “லியோ” என்னும் திரைப்படத்தை எடுக்கிறார் இந்த படம் சர்வதேச அளவில் நடக்கும் போது பொருள் சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாக இருக்கிறதாம்.. லியோ படத்தில் விஜய் உடன் கைகோர்த்து மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, சஞ்சய் தத், பிக் பாஸ் ஜனனி..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆகும் என டைட்டில் வீடியோவில் அறிவித்தது. அதனை தொடர்ந்து இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது கைதி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் லோகேஷ் முடிவு செய்துள்ளாராம்.

கைதி படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது தொடர்ந்து கைதி 2 படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது  ரசிகர்களும் கைதி 2 படத்தை எப்பொழுது எடுப்பீர்கள் என கேட்டுக்கொண்டு வந்தனர் ஒரு வழியாக தற்போது அதற்கு முடிவு கட்டியுள்ளார். 2023 இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி 2024 இறுதியில் கைதி 2 படத்தை ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இந்த படமும் லோகேஷின் எல்சியுவில் இணையும் என சொல்லப்படுகிறது. இதை கேள்விபட்ட பலரும் கைதி 2  திரைப்படத்தில் rolex வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா.. இல்லையா என தற்போது கேள்வியும் எழுப்பி வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் அதற்கும் லோகேஷ் பதில் சொல்வார் என தெரிய வருகிறது.