சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு லியோ பட வீடியோவை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.! மரண மாஸ்சாக இருக்கும் வீடியோ..

Leo Movie: இன்று லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பதனால் லியோ படத்தில் அவருடைய கேரக்டருக்கான வீடியோவை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக மரண மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் திசையமைப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. லியோ படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் லியோ ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைவுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அப்படி லோகேஷ் கனகராஜ் அவருடைய கேரக்டருக்கான லியோ படத்தின் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார். லியோ படத்தில் சஞ்சய் அந்தோணி தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் ஸ்டைல் வில்லனாக மரண மாஸ்சாக இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

லியோ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதமேனன் மற்றும் ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்திருக்கும் நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, சதீஷ்குமார் கலை இயக்கத்திலும், அன்பறிவு ஸ்டண்ட் இயக்கத்திலும், தினேஷ் நடன இயக்கத்திலும் பணியாற்றியுள்ளனர்.

Leave a Comment

Exit mobile version