36 வயது நடிகையை தளபதி 67-ல் நடிக்க வைக்கும் லோகேஷ் கனகராஜ்.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

0
thalapathy-67
thalapathy-67

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசலிலும் லாபம் பார்த்து வருகிறது இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இதுவரைக்கும் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எங்கு சென்றாலும் தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வேண்டுமென்றால் பல தரப்பு ரசிகர்களும் கேட்டிருந்தனர் இந்த நிலையில் ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று கூறி வந்தார். அதுமட்டும் இல்லமால் வாரிசு படம் வெளியான உடனே அப்டேட் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ விஜயுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகை யார் யார் என்ற அப்டேட்டை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு 36 வயது நடிகையை லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

வாமணன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய அதன் பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் விஜயுடன் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி 67 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களையும் அறிவித்து வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடன ஆசிரியர் சாண்டி மாஸ்டர் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்க உள்ள தகவல் தற்போது உறுதியாகிவிட்டது.

இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.