தளபதி 67-ல் முக்கிய நடிகையை முக்காடு போட்டு மரைத்த லோகேஷ் கனகராஜ்.! உண்மையை கண்டுபிடித்து ட்ரோல் செய்யும் ரசிகர்கள்…

0
thalapathy-67
thalapathy-67

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கு முன்பாகவே தளபதி 67 திரைப்படத்தை பற்றி சமுகவலைதளத்தில் அதிக பேச்சிகள் அடிபட்டு கொண்டே இருந்தது அது மட்டுமல்லாமல் வாரிசு திரைப்படம் வெளியான பிறகு தளபதி 67 திரைப்படத்தைப் பற்றி அதிக அளவில் பேச ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவபோது தளபதி 67 அப்டேட் குறித்து விரைவில் வந்துவிடும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் தளபதி 67 குறித்த அப்டேட் பிப்ரவரி 1,2,3 தேதிகளில் வெளியாகி விடும் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் நேற்றில் இருந்து தொடங்கப்பட்ட தளபதி 67 அப்டேட் ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாகி வருகிறது. என்னதான் மூடி மறைத்தாலும் ஒரு அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததை ரசிகர்கள் கண்டுபிடித்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

அதாவது ஏற்கனவே இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா அவர்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் பரவியது. இந்த நிலையில் நேற்று பட குழுவினர் காஷ்மீர்க்கு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்ற நிலையில் நடிகை திரிஷாவும் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் நேற்று தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களை அறிவித்த படக்குழுவினர் திரிஷாவை அறிவிக்காமல் இருந்தனர். இதனை கண்டுபிடித்த ரசிகர்கள் என்னதான் மூடி மறைத்தாலும் அந்த அப்டேட் எங்களுக்கு தெரியும் என்று திரிஷாவின் புகைப்படத்தை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் ஒரு ப்ரோமோ வீடியோவாக வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் அந்த ப்ரோமோ வீடியோ சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

trisha
trisha

அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு முக்கிய வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசாகி கொண்டே இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.