தடம் தெரியாமல் இருந்த 5 நடிகர்களை தூக்கிவிட்ட லோகேஷ் கனகராஜ்.!

Director Lokesh : சினிமாவில் பெரிய அனுபவம் இல்லை என்றாலும் தனது கதையின் மீது நம்பிக்கை படங்களை எடுத்து வருவர் இயக்குனர் லோகேஷ். அதுவும் வெளிவந்து பெரிய வெற்றியை பெறுகின்றன இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இவர் இயக்கும் படங்கள் தொடர்ந்து போதை பொருள் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் அதில் நடிக்கும் நடிகர்கள் தனி தத்துவமாக தெரிகின்றனர் குறிப்பாக ஹீரோவையும் தாண்டி குணச்சித்திர நடிகர்களுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்படுகின்றன அப்படி தனது படத்தின் மூலம் லோகேஷ் வளர்த்து விட்ட 5 நடிகர்களை பற்றி பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக குணச்சித்திரம் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சார்லி இவர் மாநகரம் படத்தில் ஒரு டாக்ஸி டிரைவராக நடித்திருப்பார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து பலரையும் கண்கலங்க வைத்திருப்பார். மாநகரம் வெற்றி பெற முக்கிய காரணமாக அந்த கதாபாத்திரம் இருந்தது.

கைதி படத்தை தனி ஒருவனாக கார்த்தியை தூக்கி நிப்பாட்டு இருந்தாலும் இந்த படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் பலர் நடித்து அசத்தினர் அந்த வகையில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஜார்ஜ் மரியன் நடித்திருப்பார் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் உண்மையான போலீசாகவே மாறி நடித்திருப்பார் மேலும் எமோஷனல் சீன்களிலும் அவர் பிரமாதமாக பின்னி பலரையும் கண்கலங்க வைத்திருப்பார்.

கைதி படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது நடிகர் நரேன் கதாபாத்திரம் தான்  ஒரே நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருப்பார்.

லோகேஷன் படங்களில் அதிகம் வரக்கூடிய ஒரு நடிகர் அர்ஜுன் தாஸ்  கைதி மாஸ்டர் விக்ரம் என மூன்று படங்களிலுமே மிரட்டி இருப்பாரு இவர் தனது தனி தத்துவமான குரலின் மூலம் ரசிகர்கள் மனதில் ஃபேமஸ் ஆகியுள்ளார். மேலும்  தொடர்ந்து  வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

கைதி படத்தில் சில காமெடி காட்சிகள் வருகிறது என்றால் அது காமாட்சி கதாபாத்திரத்தில் நடித்த தீனா வரும்போது தான் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கினார் இந்த படத்திற்கு பிறகு  ஒரு சில நடிகர்களுடன் படம் பண்ணி வருகிறார்.