விக்ரம் 2 படத்தில் கமலுக்கு போட்டியாக முரட்டு வில்லனை களமிறக்கப் போகும் லோகேஷ் கனகராஜ்.!

0
vikram
vikram

சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை தற்போது கைவசம் வைத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய திரைப்படங்கள் விரல்விட்டு என்னும் அளவிற்கு இருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட ஹிட் என்பதால் அவரது மார்க்கெட் அதிகரித்துள்ளது.

இவர் கடைசியாக நடிகர் கமலை வைத்து விக்ரம் என்னும் படத்தை எடுத்திருந்தார். அந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியதன் காரணமாக பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளியது. இதுவரை விக்ரம் திரைப்படம் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67 படத்தை இயக்க ரெடியாக இருக்கிறார். அந்தப் படத்தின் கதைக்கு ஏற்றபடி தற்போது நடிகர்களை செலக்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் 2 படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்தப் படத்திற்கு ஒரு சிலரை இப்பொழுது குறி வைத்து இருக்கிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜூக்கு பிடித்த நடிகர் மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தாராம் ஆனால் அப்பொழுது அது நடக்காமல் போனது எனவே விக்ரம் 2 படத்தில் மன்சூர் அலிகானை நடிக்க வைக்க..

அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது அதுவும் கமலுக்கு வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைத்து அழகு பார்க்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் இது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

mansoor ali khan
mansoor ali khan