maveeran : ஒரே ஒரு சீனை பார்த்து மிரண்டுப்போன லோகேஷ் கனகராஜ்.! மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

maveeran : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஷ்கின், monisha blessy, சரிதா, கவுண்டமணி, சுனில், யோகி பாபு..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றதை தொடர்ந்து  படத்தின் ட்ரைலர்  வெளிவந்து வைரலானது. அதனை தொடர்ந்து படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது.

அதற்கு முன்பாக மாவீரன் படத்தைப் பற்றியும், சிவகார்த்திகேயன் பற்றியும் பல செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் மாவீரன் படத்தை இயக்கியுள்ள மடோன் அஸ்வின் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் சொன்னது லோகேஷ் கனகராஜ் லீயோ படத்தில் பிஸியாக இயக்கி வருகிறார் அதனால் நான் மாவீரன் படத்தில் எடுக்கப்பட்ட ஒரு சிறிய காட்சியை மட்டும் போட்டு காட்டினேன் அதை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரம்மித்து போனார். மேலும் அந்தக் காட்சியை அவர்  இடைவெளியில் வைக்க சொன்னார்.

ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன் என மடோன் அஸ்வின் கூறி உள்ளார். ஒரு இயக்குனர் இன்னொரு இயக்குனர் படத்தை புகழ்ந்து பேசுகிறார் என்றால் அப்போ அந்த படம் எந்த அளவிற்கு இருக்கும் என்று பாருங்கள்.. எனவே மாவீரன் படம் ஹிட் அடிப்பது உறுதி என கூறி பலரும் கமெண்ட் அடித்து இந்த செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.

Leave a Comment