லோகேஷ் கனகராஜ் அதிரடி ட்வீட்.! கைதி 2 கன்ஃபார்ம்.! தளபதி 64 தள்ளி போகுமா.?

0
kaithi-LokeshKanagaraj
kaithi-LokeshKanagaraj

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ், இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்,.

இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில், ஹீரோயின் இல்லை, பாடல் இல்லை, இருந்தாலும் தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் வெளியாகும் என டீஸ்ட் கொடுத்திருந்தார்கள்.

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார், அந்த ட்விட்டரில், கைதி 2 படத்திற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு  நன்றி என்று தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுக்கு நன்றி தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ், கைதி 2 உருவானால் தளபதி 64 திரைப்படம் தள்ளிப் போகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் தலபதி 64 படத்திற்கு பிறகு தான் கைதி இரண்டாம் பாகம் தொடங்கும் என உறுதியாக நம்பலாம் என தெரிகிறது.