கொடூரமான முரட்டு வில்லணை தளபதி 67-ல் நடிக்க வைக்கும் லோகேஷ் கனகராஜ்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வளம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூல் வேட்டை  நடத்தி வருகிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படமாக விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் மோதியது.

வாரிசு திரைப்படத்தை வம்சி அவர்கள் இயக்கியிருந்தார் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. வாரிசு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இந்த நிலையில் விஜய் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 நடிக்க இறங்கிவிட்டார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது அது மட்டும் இல்லாமல் படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தொடங்கியது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான்.

மேலும் வாரிசு திரைப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுகள் திகட்ட தகட்ட வெளியாகும் என வெளிப்படையாக கூறியிருந்தார் அவர் கூறியது போல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீப காலமாக வெளியாகி கொண்டு இருக்கிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கிறார் மேலும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் வசனம் எழுதுகிறார்.  இப்படி அடுத்தடுத்த அதிகாரபூர்வ அப்டேட்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் நடிக்க இருப்பதாக பட குழு அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், ஆகியவர்கள் நடிக்க இருக்கிறார்கள் இவர்கள் எந்த கதாபாத்திரம் என்று இன்னும் பட குழு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.  அப்படி இருக்கும் வகையில் 80 காலகட்டத்தில் முரட்டு வில்லனாகவும் கொடூர வில்லனாகவும் நடித்து வந்த மன்சூர் அலிகான் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் ஷேர் செய்தும் கமெண்ட் செய்து வருகிறார்கள். மன்சூர் அலிகான் கண்டிப்பாக வில்லன் ரோலில் தான் நடிப்பார் எனவும் கமெண்ட் செய்துள்ளார்கள் ரசிகர்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment