மீண்டும் தளபதி விஜய்யுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்.?

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி தற்போது வெற்றி கண்டு வருகிறார் இந்த திரைப்படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் வெளியானது.

மேலும் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்து வருகிறது இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு மாநகரம்,கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பற்றி கூறியுள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதில் கண்டிப்பாக மீண்டும் விஜய் சாருடன் பணியாற்றுவேன் ஆனால் அது மாஸ்டர் 2 வது இருக்காது என கூறி உள்ளார் என்று இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக நீங்கள் தளபதி 66 ஆவது திரைப்படத்தை இயக்க வேண்டும் என கூறிவருகிறார்கள்.

vijay
vijay

Leave a Comment