திடீரென முன்னணி நடிகரை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.! ஒருவேளை கதை சொல்லி இருப்பாரோ.?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படமும் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தரும். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படம் நல்ல வசூலை பெற்று தந்தது.

மேலும் இவர் அடுத்தபடியாக த்ரிவிக்ரம் சீனிவாஸ் மற்றும் ராஜமவுலி போன்ற இயக்குனர்களுடன் அடுத்தடுத்த திரைப்படம் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சர்க்காரு வாரி பட்டா திரைப்படத்தை இயக்குனர் பரசுராமன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் சுமார் 200 கோடியை வசூல் தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் முதல்முறையாக மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

keerthy suresh
keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் அனைவரும் பேனர் வைத்து கொண்டாடி உள்ளார்கள். அவரது நடிப்பை மற்றும் நடனத்தையும் சிறப்பான முறையில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

நடிகர் மகேஷ்பாபு அடுத்த திரைப்படத்திற்கு நடிக்க களமிறங்கி விட்டார். அந்த திரைப்படம் இயக்குனர்  ராஜமௌலி இயக்கத்தில் உருவாக  உள்ளது. இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

pooja hegde
pooja hegde

மேலும் விக்ரம் திரைப்படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹைதராபாத் சென்ற நிலையில் நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்து ஒரு சில மணிநேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர்  மகேஷ் பாபுவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதுபற்றி  தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment