4 ,5 வருடங்களாக ஆலோசித்து வைத்திருக்கிறேன் இந்த மாஸ் நடிகருக்கான கதையை .! லோகேஷ் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.மேலும் இவர் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலை சமீபத்தில் இவர் அந்த கதை அவருக்கு எழுதியது என்றும் அதில் சூர்யா கண்டிப்பாக விரைவில் நடிப்பார் என லோகேஷ் கனகராஜ் சமிப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து கலக்கி இருந்தார்.

இதை அடுத்து விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய தரப்பில் நடிக்க உள்ளார் என்பதை உறுதியாக்கி உள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது தளபதி விஜய் வைத்து தளபதி 67 வது திரைப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக விக்ரம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூர்யாவுக்காக ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு ஏற்றார் போல் கதை எப்படி இருக்கும் என லோகேஷ் கனகராஜ் இடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ‘இரும்புகை மாயாவி’ என்ற கதை அவருக்காகவே எழுதியது என்றும் சூர்யாவை மனதில் வைத்து தான் அந்த கதையை எழுதினேன் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

இந்த கதையை 4,5 வருடங்களாக ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் இந்த கதை முழுவதும் சூர்யாவுக்கும் தெரியும் என்றும் தெரிவித்திருந்தார் கண்டிப்பாக ஒருநாள் சூர்யா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்புக் கொள்வார் மேலும் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் இரும்புகை மாயாவி என்ற திரைப்படம் உருவாகும் என கூறியுள்ளார்.

Leave a Comment