‘லியோ’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கொன்னுருப்பாரு என மீம்ஸ் போட்டு பங்கம் செய்யும் ரசிகர்கள்.!

சோசியல் மீடியாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் உடன் இணைந்து லியோ என்ற படத்தினை உருவாக்க இருக்கிறார்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்காக சில கமர்சியல் விஷயங்களை லோகேஷ் கனகராஜ் சேர்த்திருந்த நிலையில் முழுக்க முழுக்க இந்த முறை தன் ஸ்டைலில் லியோ படத்தினை உருவாக்கி வருகிறார். இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் படத்திற்காக காத்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவே இதற்காக லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர்கள் அனைவரும் காஷ்மீர் சென்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார்.

இவ்வாறு இரண்டு நாட்கள் மட்டுமே திரிஷா காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார் எனவே ரசிகர்கள் த்ரிஷாவை கலாய்த்து வருகின்றனர். ஏனென்றால் இதுவரையிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எதிலும் பெரிதாக கதாநாயகிகள் இருக்க மாட்டார்கள் ஆனால் திரிஷா படத்தில் நடிக்க இருந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகப்படுத்தியது.

இப்படிப்பட்ட நிலையில் மூன்றே நாள் மட்டுமே படப்பிடிப்பில் திரிஷா கலந்து கொண்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் நாயகியான திரிஷாவை லோகேஷ் கொன்னுருப்பார் என மீம்ஸ் போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். லியோ படத்தின் மூலம் 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா கூட்டணி இணைந்துள்ளது.

trisha
trisha

இவர்களுடைய நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி, ஆதி, குரு போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. எனவே லியோ படத்தில் திரிஷா இணைந்திருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது விஜய் மற்றும் திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment