தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக இவர் எடுத்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது அதனைத் தொடர்ந்து லோகேஷ் விஜய் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர். முதல் கட்ட சூட்டிங் சென்னையில் சைலண்டாக முடிந்ததை எடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங்காக 180 பேர் கொண்ட ஒரு குழு தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் சென்றது
அங்கே கடும் குளிரென்று கூட பார்க்காமல் படக்குழு மற்றும் நடிகர் நடிகைகள் தீவிரமாக வேலை செய்தனர் ஒரு வழியாக இரண்டு மாதங்கள் கழித்து அண்மையில் தான் படப்பிடிப்பு நிறைவடைந்தது அங்குபட்ட கஷ்டங்களை எல்லாம் ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தது. அது பெரிய அளவில் வைரலானது. அதுவே லியோ படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் குறித்தும், லியோ திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் குறித்தும் படத்தில் நடித்து வரும் கௌதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அதில் அவர் சொன்னது காஷ்மீரில் விஜய் உடன் நடித்த காட்சிகள் வியப்பாக இருந்தது.
லியோ படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கிறது. தன்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்து எந்த ஒரு தகவலையும் பகிரக்கூடாது என கூறினார். அந்த விஷயத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் எனவும் தெரிவித்துள்ளார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.