லோகேஷ் கனகராஜை தட்டி தூக்கியா தெலுங்கு நடிகர்.? தளபதி 67 முடிச்சிட்டா.. போகவேண்டியது தான்.!

lokesh
lokesh

தமிழ் சினிமா உலகில் நான்கு படங்களை இயக்கியிருந்தாலும் அந்த நான்கு படங்களும் மெகா ஹிட் படங்களாக அமைந்ததால் லோகேஷின் சினிமா பயணம் தற்போது அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது குறிப்பாக தமிழை தாண்டி மற்ற மொழி நடிகர்களும் லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் இயக்கிய மாநகரம் கைதி மாஸ்டர் ஆகிய படங்கள் வெற்றியை ருசித்தன அதேபோல விக்ரம் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படக்குழு எதிர்பார்த்ததையும் தாண்டி படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய வருகிறது.

இதனால் லோகேஷ் மற்றும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சினிமா பயணமும் சற்று அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. இதுவரை கமலின் விக்ரம் திரைப்படம் 350 கோடி வசூல் செய்து உள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து  தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு பக்கம் போக லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார் அதற்காக பல்வேறு தெலுங்கு டாப் ஹீரோக்களுடன் கதை கூறி உள்ளார் இந்த ஹீரோவும் சம்மதிக்கவில்லை இருப்பினும் தனது விடாமுயற்சியால் தொடர்ந்து கூறிவருகிறார் அப்படி அண்மையில் விக்ரம் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் வேலைக்காக தெலுங்கு பக்கம் சென்றார்.

அப்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை சந்தித்து ஒரு ஒன்லைன் ஸ்டோரி ஒன்றை சொல்லி உள்ளார் அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே நிச்சயம் நாம் இணைவோம் என கூறியுள்ளாராம். ராம் சரண் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதை முடித்துவிட்டு லோகேஷ் உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்குவார் என கூறப்படுகிறது. அதேசமயம் லோகேஷ்  தளபதி 67 படத்தை முடித்துவிட்டுதான் ராம்சரணுடன் இணைவார் என கூறப்படுகிறது.