விஜயின் செயலால் நொந்து நூடுல்ஸ் ஆன லோகேஷ் கனகராஜ்.. பதட்டத்தில் “லியோ” படக்குழு

leo
leo

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த  வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து விஜய் “லியோ” படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் லோகேஷ் படங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய ஆக்சன் பேக் திரைப்படமாக இருக்கும் அந்த வரிசையில் இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சிக்கான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு சொன்னது அதை உறுதிப்படுத்தும் வகையில் விலை உயர்ந்த கேமராக்களை இந்த படத்தில் பயன்படுத்தி வருகிறது.

இதனால் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது லியோ படத்தில் விஜயுடன் இணைந்து மிஸ்கின், அர்ஜுன்,  மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர் இதுவரை மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவன் ஆகிய இருவருடைய சூட்டிங் மட்டும் நிறைவு பெற்றிருப்பதாக தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் லியோ படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் “தளபதி விஜய்” அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. லியோ படத்தின் இரண்டாவது ஷூட்டிங்  காஷ்மீரில் கடும் குளிர் என்று பார்க்காமல் படக்குழு எடுத்து வருகிறது தினமும் காலை 9 மணிக்கு எல்லாம் படப்பிடிப்பு தொடங்குமாம் அப்பொழுதே குளிர் அதிகமாக இருக்கும்.. ஒரு நாள் படப்பிடிப்பிற்கு அனைவரும் ரெடியாகி கொண்டிருந்தனர் அப்பொழுது விஜய் மட்டும் அங்கே இல்லை  சுற்றியே தேடிப் பார்த்தனர் அப்பொழுது விஜயின் உதவியாளர்.

அங்கு வந்து அவர் காலையில் 8:00 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விட்டார்கள் என சொன்னதும் லோகேஷ் கனகராஜிக்கு பயம் வந்துவிட்டதாம் உடனடியாக படப்படப்பு தளத்திற்கு சென்று பார்த்தால் விஜய் ஜெர்கின் போட்டு கொண்டு அமர்ந்திருந்தாராம் அவரிடம் இவ்வளவு சீக்கிரம் நீங்கள் வரவேண்டும் என அவசியம் இல்லை என கூற எனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்ல நீங்க எப்ப வேணாலும்  ஸ்டார்ட் பண்ணுங்க நான் சீக்கிரம் வந்து விடுவேன் என கூறினாராம்..