படத்தில் நடித்துள்ள லோகேஷ் கனகராஜ்.! யார் திரைப்படத்தில் பார்த்தீர்களா

0
lokesh
lokesh

குறுகிய ஆண்டில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார். விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படம் குறித்த அபிஷியல் அப்டேட் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக ஒரு படத்தில் நடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது  மாநகரம் திரைப்படம் மூலம் சினிமாவில் முத்திரை பதித்த லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து கைதி மாஸ்டர் விக்ரம் என பிளாக் பாஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்க ரெடியாக இருக்கிறார் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ஒரு படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூக்குத்தி அம்மன், எல்கேஜி, வீட்ல விசேஷமாகிய, படங்களை இயக்கி நடித்துள்ளவர் தான் நடிகர் ஆர் ஜே பாலாஜி இவர் விஜே ஆகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் அவர்கள் தான் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தில் ஒரு இயக்குனராகவே  நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜன் கேரக்டர் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய  பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலைகாட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து தற்போது சிங்கப்பூர் சலூன் படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.