லோகேஷ் கனகராஜ் கமல் இணையும் திரைப்படத்தின் வில்லன் யார் தெரியுமா.? அட இந்த டாப் ஹீரோவா அப்போபடம் மரண ஹிட் தான்

இயக்குனர் லோகேஷ் மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்ததாக கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆனது.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.,  விக்ரம் டைட்டில் டீஸார். வெப்சீரிஸ் காப்பி என பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் கமலின் விக்ரம் படம் ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ் அதனால் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது,  இந்த வேலைகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

அதுமட்டுமில்லாமல் படத்தை வெறும் மூன்றே மாதத்தில் முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவுடன் இருக்கிறார், மேலும் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தில் யார் நடிகை மற்றும் வில்லன் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது,  இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்பொழுது வில்லன் யார் என்ற தகவல் லீக் ஆகியுள்ளது.

கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது,  இவர் ஏற்கனவே வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த திரைப்படத்தில் கொஞ்சம் கொடூரமான வில்லனாக காட்ட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment