பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்.! விவரம் இதோ..

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

சினிமாவில் சில திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதனால் கோடிக்கணக்கில் லாபத்தை ஈட்டி வருகிறது.

இதன் காரணமாக தொடர்ந்து முன்னணி நடிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க விரும்பி வருகிறார்கள். அந்த வகையில் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் விக்ரம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்த நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை கண்ட நிலையில் இதனை அடுத்து தற்பொழுது இவர் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து கைதி 2 படத்தினை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் 171ஆவது படத்தினையும் இவர்தான் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் ஒரே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பு அறிவு இயக்கம் இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது இந்த படப்பிடிப்பை தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி வரும் நிலையில் தற்போது நடிப்பிலும் களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.