இப்படியே போனா தயாரிப்பாளர் தலையில் துண்டு தான்.. லியோ படக்குழுவை அவசர அவசரமா பேக் செய்த லோகேஷ்

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்க.. தளபதி விஜய் லோகேஷ் உடன் தற்பொழுது கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அண்மையில் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் படத்தில் எதிர்பார்ப்பை ஏற்றி வைத்துள்ளது படக்குழு. லியோ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டம் ஷூட்டிங் ஜம்மு காஷ்மீரில் நடத்தியது.

இதற்காக படக்குழு தனி விமான மூலம் அங்கு போனது என்பது குறிப்பிடத்தக்கது  கடும் குளிரென்று கூட பார்க்காமல் படபிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வந்தது. லியோ திரைப்படம் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாக வைத்து உருவாகிறது படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்து அர்ஜுன், சஞ்சய் தத்..

மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் பலர் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர் காஷ்மீரில் கட்டும் குளிரிலும் சூட்டிங் நடைபெற்ற வருகிறது. இதில் ஒரு சிலர் தாக்கு பிடிக்க முடியாமல் கதறுகின்றனர் ஆனால் வெளியே சொல்லாமல் படத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் அங்கு நேரம் போகப் போக  கேமரா கூட வேலை செய்யாமல் போய்விடுகின்றதாம். இதனால் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஷூட்டிங் எடுக்க படுகிறதாம்.. இப்படியே போனதால் நினைத்த நாட்களில் அங்கு படபிடிப்பை எடுக்க முடியவில்லை.. இனி அங்கு இருந்தால் நடிகர், நடிகைகள் தங்கு வசதி மற்றும் பல செலவுகள் ஆகும் இதனால் படத்தின் பட்ஜெட் இன்னும் அதிகரிக்கும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட இயக்குனர்  ..  காஷ்மீரில் இருந்து லியோ படக்குழு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சென்னை வந்துள்ளனர்.

Leave a Comment