கமலை இழுத்து உள்ளே போட்ட லோகேஷ்.! வெறித்தனமாக உருவாகும் தளபதி 67…!

logesh
logesh

தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் லொகேஷன் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அதுமட்டுமில்லாமல் கடைசியாக இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது அது மட்டும் இல்லாமல் வசூலில் மிகப்பெரிய வசூலை ஈட்டியது.

விக்ரம் திரைப்படத்தில் கமல் சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்கள் நடித்தார்கள் அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா, ஷிவானி நாராயணன், மகேஸ்வரி என பலரும் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யார் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடம் இருந்தது.

இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் வாரிசு திரைப்படத்தை விட லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் அடுத்த திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இணையும் திரைப்படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை ஆனால் இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் நடிக்க போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கமல் இந்த திரைப்படத்தில் ஒரு கேமியா ரோலில் விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

தளபதி 67 திரைப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எல் சி யு கான்செப்டில் இணைக்க முயற்சி செய்ய இருப்பதாக பேச்சுவார்த்தை கிளம்பி விட்டது. விக்ரம் திரைப்படத்துடன் தளபதி 67 இணைத்து இயக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடைய அதிகரித்துள்ளது ஒருவேளை அது போல் இருந்தால் திரையரங்கமே தெறிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக இதுபோல் படத்தை இயக்கினால் வசூல் 500 கோடியை தாண்டி மிகப்பெரிய சாதனை படைக்கும் எனவும் கூறப்படுகிறது.