தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே டைட்டில் கார்டு வெளியீட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே எகுற வைத்தது. தற்போது சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
முதல் கட்ட ஷூட்டிங் இன் சென்னையில் முடிந்ததை அடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் பறந்தது அங்கு கடும் குளிரென்று கூட பார்க்காமல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம் இதுவரை மிஷ்கின், கௌதம் வாசுதேவ் போன்றவர்கள் காட்சிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்றபடி அனைத்து நடிகர், நடிகைகளும் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படம் இங்கிலீஷ் படத்தின் காப்பி என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. லியோ திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படம் ஆங்கில படத்தின் நாவல் ஒன்றை தழுவி தான் எடுக்கப்படுவதாக முன்பு தகவல் வெளியாகிறது.
ஆனால் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுவது என்னவென்றால் “a history of violence” என்ற படத்தின் ஒரு சில காட்சிகளை மட்டுமே நாங்கள் எடுக்க உள்ளோம் முழு படமும் இல்லை என கூறி வந்தனர். இந்த படம் அமேசான் பிரைமில் அனைவரும் விரும்பி பார்க்கப்பட்ட படம் ஆனால் கடந்த 25 நாட்களாக இந்த படத்தை அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதுவும் இந்தியாவில் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. சந்தேகம் எழுந்து உள்ளது.
அப்படி என்றால்.. a history of violence என்ற ஹோலிவுட் படத்திலிருந்து சின்ன காட்சி இல்லை.. பல பெரிய காட்சிகளை லோகேஷ் காப்பி அடித்து லியோ திரைப்படத்தை எடுத்தாலும் எடுக்கலாம் இது உண்மையாக இருந்தாலும்.. அதை வெளிப்படையாக சொன்னால் எந்த பிரச்சினைகளும் இல்லை ஏன் இப்படி மூடி மறைக்கிறார் என தெரியவில்லை என பலரும் கேள்வி கேட்டு இப்பொழுதே குடைய ஆரம்பித்துள்ளனர் வெகு விரைவில் இதற்கான சரியான விளக்கம் வந்தால் மட்டுமே நமக்கு தெளிவு கிடைக்கும்.