கமல் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் மிரட்டலான வில்லன் இந்த முன்னணி நடிகர் தான்.! ஒருவேளை கொடூர வில்லனாக இருப்பாரோ.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடன் விக்ரம் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் அதிக லைக்ஸ் பெற்று வந்தது, ஆனால் ஒருசில நெட்டிசன்கள் இது ஹாலிவுட் திரைப்படத்தின் அட்ட காபி என கூறினார்கள், ஆனால் இந்த டைட்டில் டீசர் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலானது.

இந்த டைட்டில் டீசருக்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார், மேலும் லோகேஷ் கனகராஜ் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் பணிகளை மிகவும் பரபரப்பாக பார்த்துக்கண்டு வருகிறார்.

அதேபோல் சைடில் மாஸ்டர் திரைப்படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது, அப்படி இருக்கும் வகையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் நாசுக்காக கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போவது யார் என்பதை கூறியுள்ளார்.

அது வேறு யாரும் கிடையாது தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களை வருடத்தில் நடித்துவரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதிதான், லோகேஷ் கனகராஜ் பேட்டி எடுத்த தொகுப்பாளர் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதியை போடலாமா என கேட்டதற்கு நாம் அதைப்பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம் என மறுத்துவிட்டாராம்.

இந்த தகவலில் இருந்து கிட்டத்தட்ட விஜய் சேதுபதிதான் விக்ரம் திரைப்படத்தின் வில்லன் என்பது ஓரளவு தெரியவந்துள்ளது.

vijay-sethupathi-latest-tamil360newz
vijay-sethupathi-latest-tamil360newz

Leave a Comment