குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட் இதோ.!

சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன் அதிக பிரபலம் செய்யப்படுகின்றன. இருப்பினும் அத்தகைய படங்கள் வெற்றி, தோல்வியில் முடிவடைகின்றன என்பது நாம் அறிந்ததே. திரைக்கதை மற்றும் கதைக்கரு உள்ள இரு படங்கள் கூட மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் ஒரு சில படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

1.சுந்தரபாண்டியன்

சசிகுமார் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சுந்தரபாண்டியன் இப்படம் கிராமத்து கதை கொண்ட படமாக எடுக்கப்பட்டது. இப்படம் முழுக்க முழுக்க சிறந்த கதைகளம் கொண்ட படமாக இருந்ததால் மக்களுக்கு பிடித்துப்போன படமாக அமைந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பட்ஜெட் 5.5 கோடி, வசூல் செய்தது 44 கோடி ஆகும்.

2.பிச்சைக்காரன்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின் நடிகராக உரு பெற்றவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிச்சைக்காரன். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதை காரணமாக இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் பட்ஜெட் 10 கோடி, வசூல் செய்தது 40 கோடி ஆகும்.

3.முண்டாசுப்பட்டி

விஷ்ணு விஷாலுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது முண்டாசுப்பட்டி. இவர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆகும். குறும்பட கதையை விவாதித்து முழு நேர படமாக சுவாரசியமாக இயக்கி வெற்றி கண்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது வித்தியாசமான ஒரு படமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்தது. இப்படத்தின் பட்ஜெட் 2 கோடி, வசூல் செய்தது 10 கோடி.

4. எல்கேஜி

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எல்கேஜி. அரசியல், நக்கல், நையாண்டி கொண்டு இப்படமும் உருவாக்கப்பட்டது. இப்படம் மக்களுக்கு மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்ததால், இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பட்ஜெட் 3.5 கோடி, வசூல் செய்தது 20 கோடி.

5.காக்கா முட்டை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் காக்கா முட்டை யாரும் எதிர்பாராத அளவில் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக உருமாற்றி தந்தனர். இப்படம் சிறந்த சமுதாயத கருத்து கொண்ட படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் தேசிய விருது பெற்றது.இப்படத்தின் பட்ஜெட் 1கோடி வசூல் செய்தது 10 கோடி.

6.சூது கவ்வும்

விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சூது கவ்வும். இப்படம் அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக அமைந்தது. இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அந்த ஆண்டின் சிறந்த படமாக பல விருதுகளை தட்டிச் சென்றது. இப்படத்தின் பட்ஜெட் 2 கோடி, வசூல் செய்தது 20 கோடி.

7.பிட்சா

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு உருவான திரைப்படம் பிட்சா. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் வித்தியாசமான கதை களம் கொண்ட படமாக உருவானது . இப்படம் திரில்லர் மற்றும் திகில் காட்சிகள் கொண்டு பல ரசிகர்களை மிரள வைத்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பட்ஜெட் ரூ 1.5 கோடி, வசூல் செய்தது 8 கோடி.

8.விசாரணை

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விசாரணை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் தேசிய விருது மட்டுமல்லாமல் பல விருதுகளை தட்டிச் சென்றது. இதில் தினேஷ் மற்றும் சமுத்திரகனி போன்ற பலர் நடித்திருந்தனர் என்பது குறிபிடத்தக்கது. இப்படத்தின் பட்ஜெட் 1.5 கோடி, வசூல் செய்தது 13 கோடி.

9.மாநகரம்

லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் மாநகரம். இத்திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிடித்துப்போன படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பட்ஜெட் 2 கோடி, வசூல் செய்தது 10 கோடி.

Leave a Comment