தனது தனித்துவ நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரகுவரன் படங்களின் லிஸ்ட் இதோ .!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போனவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் சிவாஜி கமலுக்கு அடுத்ததாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துச் சென்றவர் ரகுவரன் என்பது நாம் அறிந்ததே. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்து இழுக்கக் கூடியவர். வில்லன் கதாபாத்திரம் என்றாலே நாயகனுக்கு எதிர்மறையான தோற்றம் மற்றும் கம்பீரம் தான் அழகு என்பதை மாற்றி உடைத்தவர் ரகுவரன். அவர் நடித்த சில படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

1. தமிழ் சினிமாவில் இன்றளவும் மறக்கமுடியாத திரைப்படங்களில் ஒன்று சம்சாரம் அது மின்சாரம். இவர் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம்  முழுக்க முழுக்க விசுவின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அமைந்து இருந்தாலும், ரகுவரனின் திரைஉலகில் இது முக்கியமான படமாக அமைந்தது.

2. 1989ம் ஆண்டு ராஜா சின்ன ரோஜா என்ற திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வில்லனாக தோன்றி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் பலரால் ரசிக்கப்பட்டது.

3. பிரபுதேவா, நக்மா நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதலன். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் ரகுவரன் வேறுபட்ட தனது நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

4. ரகுவரன் திரை வாழ்வில் ஒரு முக்கிய படமாக அமைந்த படம் பாட்ஷா. இப்படத்தில் ரஜினிக்கு ஏற்ற சிறந்த வில்லன் இவர்தான், என்ற அங்கீகாரம் கொடுத்த திரைப்படம் பாட்ஷா. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டினார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தின் மூலம் பல பாராட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. அஜித்திற்கு திருப்புமுனை படமாக அமைந்த படம் அமர்க்களம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ரகுவரன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

6. பாட்ஷாவிற்கு அடுத்ததாக ரகுவரனுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்த படம் முதல்வன். இப்படத்தில் சரி வாதியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக பல விருதுகளை தட்டிச் சென்றார்.

7. தனுஷ் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் யாரடி நீ மோகினி. இப்படத்தில் தனுஷின் தந்தையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாழ்வில் கடைசி படமாக அமைந்தது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிற்கு கருப்பு நாளாக அமைந்தது.

8. முரளி நடிப்பில்  1999 ஆண்டு வெளிவந்த திரைப்படம் இரணியன். இத்திரைப்படத்தில் முரளி மற்றும் ரகுவரன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரகுவரன் கதாபாத்திரம் மிகவும் ஆளுமையான கதாபாத்திரமாக அமைந்திருந்தது.

9. 1987 ஆம் ஆண்டு ரகுவரன் நாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் மைக்கேல்ராஜ். இத்திரைப்படம் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

ஆஹா, ரட்சகன், அஞ்சலி, உயிரிலே கலந்தது போன்ற பல படங்களில் ரகுவரன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பிற்கு சவால் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment