மார்க் ஆண்டனி முதல் போர் தொழில் வரை.. தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய படங்களின் லிஸ்ட்

Tamil Movies: தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் 12ஆம் தேதி சின்னத்திரை தொலைக்காட்சிகளில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது வழக்கம்.

அதேபோல் தீபாவளி பண்டிகை அன்று குடும்பத்தோடு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனவே தொலைக்காட்சிகளில் புது படங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அப்படி சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவி என அனைத்திலும் தீபாவளி அன்று எக்கச்சக்கமான படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அது குறித்த லிஸ்ட்டை பார்க்கலாம்.

விஜய் டிவி: தீபாவளி ஸ்பெஷல் ஆக சரத்குமார் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த போர் தொழில், விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து, தயாரித்த பிச்சைக்காரன் 2 ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி அன்று ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞர் டிவி: தீபாவளி சிறப்பு திரைப்படமாக நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தினை வெளியிட உள்ளனர். இப்படத்தினை எச் வினோத் இயக்க தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை அனைத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் கைப்பற்றியது எனவே கலைஞர் தொலைக்காட்சியில் துணிவு ஒளிபரப்பாக உள்ளது.

சன் டிவி: தீபாவளி ஸ்பெஷல் ஆக நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தீபாவளி ஸ்பெஷல் ஆக ஜெமினி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழ்: நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா கூட்டணியில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற படம் தான் மார்க் ஆண்டனி. இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பினை பெற்றது.