பொங்கலுக்கு பட்டையை கிளப்பபோகும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்னென்ன தெரியுமா.?

0

இந்த வருடம் கொரோனா என்ற கொடிய வைரஸ் வந்து மக்களை படாதபாடு படுத்தி விட்டது. இதனால் திரையரங்குகள் அரசு திறக்கக்கூடாது என்று கூறியதால் ரசிகர்களுக்கு இந்த வருடம் பல திரைப்படங்களை OTT வாயிலாக தான் பார்த்தார்கள்.

 சமீபத்தில்தான் தீபாவளியை முன்னிட்டு திறக்கலாம் என ஆணையிட்ட போது பிஸ்கோத் மற்றும் இரண்டாம் குத்து என இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் ஒரு ஷோவுக்கு 50 பேர் மட்டும் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

இதனை அடுத்து வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு பல சப்ரைஷ் காத்துக்கொண்டிருக்கிறது  ரசிகர்களுக்கு பிடித்த படம் வெளியாக உள்ளது.

அதற்கான லிஸ்ட் இதோ.

இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகிறது அதேசமயம் சிம்புவின் ஈஸ்வரன் என்ற திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தனுஷின் ஜகமே தந்திரம், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிட உள்ளார்கள் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் பலருக்கும் கொண்டாட்டமாக இருக்கிறது.