வனிதாவை போல் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேறிய பிரபலம்.! வருத்தத்தில் ரசிகர்கள்

simbu biggboss ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பொழுது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது டிஸ்னி ஹாட் ஸ்டார். இந்த நிகழ்ச்சியில் சிநேகன், அபினை, அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரைச்செல்வி, சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கி வந்தவர் தான் கமலஹாசன் ஆனால் ஒரு சில காரணத்தால் இந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார் அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை தற்பொழுது சிம்புதான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சிம்பு உள்ளே வருவதற்கு முன்பே வனிதா வலுக்கட்டாயமாக வெளியே சென்றார்.

வனிதா சென்றாலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சதீஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி  ஆகியோர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தார்கள். ஓட்டு எண்ணிக்கையை வைத்து முதன் முதலில் வெளியேற்றப்பட்டாவர் சுரேஷ் சக்கரவர்த்தி தான் இருந்தாலும் அவருக்கு மறு வாய்ப்பு வழங்கி மீண்டும் உள்ளே அனுப்பினார்கள்.

தனக்கு கொடுத்த இரண்டாவது வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய கேமை அழகாக விளையாடி வந்தார். அவர் தன்னுடைய வயசுக்கு இளம் போட்டியாளர்களுக்கே டஃப் கொடுத்து வந்தார். அதே போல் இவருக்கும் அனிதாவுக்கும் வழக்கம்போல் சண்டை வந்து கொண்டே இருந்தது இந்த நிலையில் அனிதா சென்ற வாரம் வெளியே சென்றார்.

இந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. அவருக்கு தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவர்கள் ஆலோசனை படி அவர் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

suresh
suresh