விஜய்யுடன் நடிக்க ஆசை ஆசையாய் இருக்கிறது.! தீராத ஆசையை வெளிப்படுத்திய 19 வயது நடிகை.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை பல நடிகர்களிடமும் நடிகைகளிடமும் இருந்து வருகிறது. எப்படியாவது ஒரு திரைப்படத்திலாவது விஜயுடன் பணியாற்ற வேண்டும் என பல கலைஞர்கள் ஆசைப்படுகிறார்கள்.

அப்படிதான் 19 வயது நடிகை ஒருவர் விஜயுடன் நடிக்க ஆசை ஆசையாய் இருப்பதாகவும் அவருடன் நடித்தால் போதும் எனவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளது காட்டுதீப் போல் பரவி வருகிறது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முதன்முதலாக தன்னுடைய அப்பாவின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார்.

எஸ் ஏ சந்திரசேகர் உதவியாள் நுழைந்தாலும் இவருக்கு பல கேலியும் கிண்டலும்தான் கிடைத்தது பிறகு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி தனது திறமையை வளர்த்துக் கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகர் என்ற இடத்தை பிடித்தார் இவருடைய நடிப்பு நடனம் எக்ஸ்பிரஷன் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பொழுதும் அமைதியாக ஒன்றுமே தெரியாதவர் போலவும் இருப்பார். சாட் ரெடி என்று கூறியதும் வேறு ஒரு விஜயை பார்க்க முடியும் என அவரிடம் நடித்த நடிகர்கள் பலர் பேட்டியிலும் நிகழ்ச்சியிலும் கூறியதை நாம் கேட்டுள்ளோம்.

இந்த நிலையில் திரைத்துறையில் பிரபல இளம் நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி விஜய்க்கு ஜோடியாக தளபதி 68வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இது குறித்து கீர்த்தி செட்டியிடம் கேட்டதற்கு நான் முன்பு கூறியது போல் தான் இப்பவும் எப்பவும் விஜய்யுடன் நடிக்க அதிக ஆசை ஆசையாக உள்ளது சொல்லப்போனால் அதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இந்த விஷயம் எனக்கே தெரியாது அப்படி நடந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம் எனக் கூறியுள்ளார் அக்கட தேசத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே, ராஸ்மிகா மந்தனா ஆகியோர்கள் விஜயுடன் நடித்து விட்டார்கள் இனி கீர்த்தி ஷெட்டி விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுவது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

keerthi shetty
keerthi shetty

Leave a Comment