முன்னணி நடிகர்களின் படத்தை போல் சந்தனத்தின் படமும் OTT தளத்திலா கதரும் ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமா உலகில் கடந்த சில மாதங்களாக வெளியாகும் பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகமல் நேரடியாக  இணையதளம் வழியாக வெளியாவதால் ரசிகர்கள் பலரும் கொஞ்சம் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராக திகழ்பவர் சந்தானம் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது இவர் காமெடியனாக பல திரைப்படங்களில் பணியாற்றிவிட்டு தற்போது கதாநாயகனாக வலம் வரத் தொடங்கி விட்டார்.

இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகுவதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இவரின் நடிப்பில் தற்போது டிக்கி லோனா, மன்னவன்வந்தானாடி, சபாபதி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக சபாபதி திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருவது இவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து வருகிறது ஏற்கனவே பல நடிகர்களின் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அதேபோல் சபாபதி திரைப்படமும் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது ஆனால் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சந்தானத்தின் திரைப்படமும் இப்படி ஆகிவிட்டால் நாங்கள் என்ன செய்வது எங்களுக்கு ஒரே வருத்தமாக இருக்கிறது சந்தானத்தின் திரைப்படங்கள் என்றால் அது திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என கூறி வருகிறார்கள்.

santhanam2
santhanam2

ஒரு சில ரசிகர்கள் சந்தானம் நடிக்கும் நிறைய திரைப்படங்கள் எங்களுக்கு நேரடியாக திரையரங்குகளில் தான் வெளியாகவேண்டும் அவரது திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.