நடிகர்களைப் போல் இந்த முன்னணி நடிகைகளும் வரிசையில் நின்று வாக்களித்துள்ளார்கள்.! யார் யார் தெரியுமா விவரம் உள்ளே.

0

நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் வெயில் என்று கூட பார்க்காமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செலுத்தியுள்ளார்கள்.

அந்த வகையில் தளபதி விஜய், தல அஜித்,விக்ரம்,ரஜினி,கமல், சிம்பு உட்பட ஏராளமான நடிகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த புகைப்படம் வீடியோக்கள் போன்றவை இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தங்களது வாக்குகளை பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை தங்களது ட்விட்டர்  வெளியிட்டு உள்ளார்கள்.

திரிஷா : கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.  இவர் கருப்பு நிற உடையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவிட்டுள்ளார்.

trisha 11
trisha 11

ஐஸ்வர்யா ராஜேஷ்: கருப்பு பேரழகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாக்கை செலுத்தி விட்டு பிறகு புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ishwariya rajesh 1
ishwariya rajesh 1

அதிதி : அருவி படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் அதிதி. இவரும் வாக செலுத்திவிட்டு பிறகு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

athithi
athithi

ஜனனி ஐயர் : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஜனனி ஐயர். இவர் தனது வாக்கை செலுத்தி விட்டு நான் ஓட்டு போட்டு விட்டேன் நீங்களும் ஓட்டு போடுங்கள் என்று தனது புகைப்படத்தோடு டுவிட்  ஒன்றை வெளியிட்டார்.

jenani iyar 2
jenani iyar 2

வரலட்சுமி : வாரிசு நடிகைகளில் ஒருவர் நடிகை வரலட்சுமி தனது அப்பாவான சரத்குமார் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவரும் கையில் மையுடன் ஓட்டு போட்ட பிறகு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

varalakshmi-16
varalakshmi-16

கீர்த்தி பாண்டியன்: தும்பா என்ற வேடிக்கையான திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.  இவர் அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இயக்குனர் மற்றும் நடிகருமான அருண் பாண்டியன் மகள் ஆவார். அந்த வகையில் தனது அப்பாவான அருண்பாண்டியன் மற்றும் அம்மாவுடன் ஓட்டு போட்டுவிட்டு எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

keerthi pandiyan
keerthi pandiyan