ரொலெக்ஸ் போலவே தளபதி 67-ல் மெய்ன் வில்லனை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ்.! அட இவரா அதுக்கு சரிபட்டு வருவாரா?

பொதுவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்களில் எப்படியாவது ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் என்று தற்போது உள்ள முன்னணி நடிகர் கங்கனம் கட்டிக் கொண்டு வருகிறார்கள். அப்படி சினிமாவில் வெறும் நாலு படங்களை இயக்கி தற்போது உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் கமலின் திரை வாழ்க்கையில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படமாக விளங்குகிறது. கமலை வைத்து முதல் படம் எடுத்தாலும் தரமான ஒரு படமாக கொடுத்துவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தொடங்கியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகவில்லை என்றாலும் சில தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஐம்பது வயது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் கேமியோ ரோலில் நடிகர் கமல் நடிக்க இருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்ட ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இப்படி அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் இணைகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விக்ரமை லோகேஷ் கனகராஜ் நடிக்க கேட்டு இருக்கிறார் ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனது.

அதன்பிறகு தற்போது தளபதி 67 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் விக்கரமை அனுகி இருக்கிறார். அந்த வகையில் விக்ரம் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க 30 நாட்கள் கால் சீட்டு ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி தளபதி 67 திரைப்படத்தில் விக்ரம் நடித்தால் எந்த ரோலில் நடிப்பார் என்ற தகவல் வெளியாகவில்லை ஆனால் அப்படி நடித்தால் அவர் மெயின் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Comment