ரஜினி, அஜித்தை போல இவருடனும் பணியாற்ற ரொம்ப ஆசைப்படுகிறேன் ஓப்பனாக பேசிய லோகேஷ்.!

தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் இந்த லிஸ்டில் முதன்மையானவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கி உள்ளார் இந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் என்பதால் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் லிஸ்ட்டிலும் இவர் இருக்கிறார்.

இவர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து கடைசியாக இயக்கிய திரைப்படம் விக்ரம் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியது மேலும் வசூலிலும் புதிய உச்சத்தை தொட்டது விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக சுமார் 420 கோடி வசூல் அள்ளியதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இரண்டாவது முறையாக கைகோர்க்க இருக்கிறார் தளபதி 67 படத்திற்காக தற்பொழுது விறுவிறுப்பாக கதை எழுதி வருகிறாராம். தளபதி 67 படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என ஏற்கனவே சொல்லி உள்ளார்.

அதனை தொடர்ந்து வெளிவரும் தகவல்கள் என்னவென்றால் இந்த படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் எனவும் திரிஷா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது இது தவிர சமந்தாவும் இந்த படத்தில் ஒப்பந்தமாக உள்ளார் எனவும் சொல்லி வருகின்றனர் ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை..

இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் யார் யாருடன் பணியாற்ற ஆசைப்படுகிறீர்கள் என கேட்டதற்கு அஜித் விஜயை போல ஏ ஆர் ரகுமான் உடனும் பணிபுரிய எனக்கு ரொம்ப ஆசை ஆனால் இது எல்லாம் விரைவில் நடக்குமாய் என்றால் அது எனக்கு தெரியாது என கூறினார் ஆனால் அது நடந்தாலும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Comment