என்னை போல் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்கும் திறன் இவரிடம் தான் உள்ளது – மனம் திறந்த யுவராஜ்.

0

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு புதுமுக வீரரும் சமீபகாலமாக அதிரடியை காட்ட விரும்புகின்றன ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆரம்பத்திலிருந்தும் இதுவரை யாராலும் அந்த அளவிற்கு அதிரடியை காட்ட முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.

இறுதிகட்ட நேரத்தில் ஒவ்வொரு பந்தையும் ஆக்ரோஷமாக அடிப்பது யுவராஜ் சிங் வழக்கம். அதை ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் செய்து வருகிறார் ஆனால் தற்போது இந்திய அணியில் விளையாடவில்லை என்றாலும் மற்ற உள்ளூர் போட்டிகளிலும் வெளியூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் யுவராஜ் சிங் போல் தற்போது 6 பந்துகளில் 6 சிக்சர்கள் மிகவும் கஷ்டம். தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்களில் யார் அதை செய்வார் என யுவராஜ் அவர்களிடம் கேட்டபட்டது அப்போது அவர் கூறியது. மிக சிறந்த ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவால் மட்டுமே முடியும் என தெரிவித்தார்.

அவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க முடியும் என குறிப்பிட்டார் மேலும் சிக்ஸர் அடிக்கும் பலமும், அதன் நுணுக்கமும் அவரிடம் உள்ளது நிச்சயம் அவர் இந்த சாதனையை செய்வார் என கூறினார்.

இச்செய்தியை யுவராஜ் அவர்களே தெரிவித்துள்ளதால் தற்பொழுது ரசிகர்கள் பலரும் ஆமாம் என தலையாட்ட தொடங்கி உள்ளனர் மேலும் இச்செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.