திரை உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அஜீத் சினிமாவில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு மிகப்பெரிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்த பிறகும் சினிமாவே கதியென கிடைக்காமல் தனது குடும்பம் மற்றும் மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்வதால் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் தொட முடியாத உச்சத்தை எட்டி உள்ளவர்
இருப்பினும் அஜித்தை அவ்வளவு எளிதில் எந்த ஒரு நபரும் பார்க்க முடியாது அதன் விளைவாகவே அஜித்தின் ஒவ்வொரு திரைப்படத்தையும் திருவிழாவாகக் கொண்டாட மக்கள் மன்றம் ரசிகர்கள் பெரிதும் காத்து கிடக்கின்றனர்.
அந்த வகையில் நேர்கொண்டபார்வை படத்திற்கு பிறகு அஜித்தின் வலிமை படம் இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்ட வந்ததால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர் அவர்களை புத்துணர்ச்சி கொடுத்தது மீட்டெடுக்க படக்குழு சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு கொண்டாட செய்தது மேலும் சில ஃபரஸ்ட் புக் போஸ்டர்களையும் அள்ளி வீசியது.
இந்த செய்தியை படக்குழு சைலண்டாக செய்திருந்தாலும் ரசிகர்களின் சமூக வலைதள பக்கத்தை உற்று நோக்கி இருந்ததால் ஒவ்வொரு செய்தியையும், உடனே எடுத்து வேற லெவலில் ட்ரெண்டாக்கினர்.
மேலும் இந்த திரைப்படமும் வருகின்ற ஆண்டில் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருகின்றனர் இந்த நிலையில் ரசிகர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக ஒரு சூப்பரான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது வலிமை படத்தின் ஓபனிங் பாடல் மதுரையை பின்னணியாக கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது மேலும் இந்தப் பாடல் செம குத்தாட்ட பாடலாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.