சந்திரமுகி 2 இரண்டாம் பாகத்தின் டைட்டிலை வாங்கவே இத்தனை கோடி கொடுத்த லைக்கா நிறுவனம்..

chandramugi
chandramugi

2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் அப்போது சூப்பர் டூப்பர் அடித்ததோடு மட்டுமல்லாமல் எதிர்பாராத அளவு வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேல், விஜயகுமார் போன்ற முக்கிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தது.

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஒவ்வொரு நடிகர் நடிகைகளுமே கனகச்சிதமாக நடித்ததால் படம் வேற லெவலில் இருந்தது. இந்தப் படம் இன்றும் ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரட் படமாக இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் பி வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே முனைப்பு காட்டி வருகிறார்.

படத்தின் இயக்குனர் ரஜினியிடம் சென்று சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என கேட்டுள்ளார். ரஜினி தற்போது பல புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகின்ற நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். பின்பு இயக்குனர் பி வாசு வேறு ஒரு நடிகரை வைத்து..

இந்த படத்தை எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளார் அதன்படி சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் கமிட் ஆன நிலையில் இவருடன் இணைந்து காமெடியனாக பணியாற்ற வடிவேலும் ஒப்புக்கொண்டுள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி அல்டிமேட் ஆக இருக்கும் அதுபோல் தற்போது இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலுவின் காமெடி சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது படத்தின் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. அதனால் இந்த படத்தின் டைட்டிலை பெறுவதற்காக சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை தயாரித்த சிவாஜி கணேசன் புரொடக்ஷன் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் லைகா நிறுவனம் கொடுத்ததாக தகவல்கள் கூறப்படுகின்றன.