“வலிமை” படத்தை விடாமல் துரத்தி அடிக்கும் ****.! பிளானை மாற்றிய அஜித்.? சோகத்தில் ரசிகர்கள்.

சமீபகாலமாக டாப் நடிகர்கள் பலரும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்காமல் உதறித் தள்ளிவிட்டு தற்போது இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு இளம் இயக்குனர்களை தேர்வு செய்து வெற்றி கண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபகாலமாக அஜித் சிறப்பாக செயல்படுகிறார் மேலும் வலிமை திரைப்படத்தில் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக களமிறக்கி அவருடன் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் வேறு ஒரு கதை களத்தில் இருக்கும் என இயக்குனர் ஆரம்பத்திலேயே கூறியதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே தற்போது வரையிலும் எதிரி தான் இருக்கிறது.

ஆனால் படத்தை திரையில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலம் அடைய செய்ய வேண்டும் என்பதால் எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மறைமுகமாக வைத்திருக்கிறது. இது இப்படியிருக்க ஒரு வருடத்திற்கு மேலாக எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்களும் எதிர்பார்த்து எதிர்பார்த்து சோகத்தில் தத்தளிக்கின்றனர்.

வலிமை படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது கடைசியாக சில காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது ஆனால் கொரோனா அச்சம் காரணமாக படக்குழு வெயிட் செய்து கொண்டே இருக்கிறது. மற்ற பணிகளை முடித்து விடலாம் என்று கணக்குப் போட்டு எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளை மேம்படுத்தி வருகிறது. இது இப்படியிருக்க வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியிட ஏற்கனவே கூறப்பட்டது.

தற்பொழுது இங்கும் கொரோனா அச்சம் நிலவி வருவதால் இந்த சூழலில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாமென தல அஜித் தனது கருத்தை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இப்போதுதான் இந்த செயல் நடக்கிறது என்றால் இல்லை இதற்கு முன்பாக வலிமை படத்தின் போஸ்டரை வெளியிட ரசிகர்கள் சொன்னார்கள் ஆனால் இதைவிட அப்பொழுது கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்ததால் அப்பொழுதும் அஜீத் வெளியிட வேண்டாம் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது எல்லாம் மக்களின் நலன் கருதியே இவ்வாறு செய்கிறார் என அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கூறியும் வருகின்றனர்.

Leave a Comment