LEO : எவ்வளவு சொல்லியும் அடங்காத மிஷ்கின்..! கோபத்தில் கொந்தளித்த விஜய், லோகேஷ்

leo
leo

LEO : விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை எடுத்து வருகிறார்.  தற்போது படத்தின் இறுதி கட்டப்படிப்பு ஜோராக நடைபெற்று வருகிறது படத்தில் விஜய், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றன.

அண்மையில் கூட லியோ படத்தில் அனுராக் கஷாயப் இணைந்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளி வருகின்றன. படம் வெளிவருவதற்கு முன்பாகவே அடுத்தடுத்த புகைப்படம், வீடியோ மற்றும் அப்டேட்டுகள் வெளி வருகின்றன இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் படத்தில் நடிக்கும் நடிகர்கள் லியோ படத்தை பற்றி பேசி விடுகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான மிஸ்கின் தனது சூட்டிங் முடியும்போது  லியோ படம் குறித்து ஒரு சில அப்டேட்டுகளை கொடுத்து விடுவார், அதுபோல தற்பொழுதும் மிஸ்கின் லியோ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளது லோகேஷிக்கு  கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிஸ்கின் சொன்னது என்னவென்றால்.. கிளைமாக்ஸ் காட்சியில் விஜயும், நானும் சண்டை போடுவது போல ஒரு காட்சியை இருந்தாம்.. அப்பொழுது மிஸ்கினை அடிக்க  விஜய் தயங்கினாராம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யோசித்து வேற ஏதாவது செய்து கொள்ளலாம் என கூறிவிட்டாராம். உடனே மிஸ்கின் வந்து அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை  அடிங்க என விஜய் சாரிடம் கேட்டாராம்.

ஒரு வழியாக விஜய்யை சம்பாதிக்க வைத்து அந்த காட்சியை எடுத்தார்களாம் இந்த தகவலை மிஷ்கின் பகிர்ந்து கொண்டார் இந்த செய்தி தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலானாலும் லோகேஷுக்கு கோபத்தை கொடுத்துள்ளது ஏனென்றால் கிளைமாக்ஸ் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியே வர கூடாது என முடிவு எடுத்து இருந்தாராம் ஆனால் மிஸ்கின்  இப்படி உளறிவிட்டாராம்.