சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டார் லோகேஷ்.! வெளியானது லியோ விமர்சனம்…

Leo twitter review : லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதிக்க முடியாது என கூறிவிட்டார்கள் அதனால் காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ தொடங்க இருக்கிறது.

அதிகாலை காட்சியை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் லியோ திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் லியோ திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து ஹிந்தி மீடியாவில் ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது லியோ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்யே  பெருமைப்படுவார் படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக இருக்கிறது எனவும் ஒரு காட்சியை கூட மிஸ் பண்ணி விடாதீர்கள் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்கள் இந்த விமர்சனம் சினிமா ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

மேலும் லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து த்ரிஷா பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

அதேபோல் இன்னும் பல நடிகர்கள் பெயர் குறிப்பிடாமல் அமைதி காத்து வருகிறார்கள் கேமியோ ரோலில் யார் நடித்துள்ளார் என்று பலரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் அவர்கள் யார் யார் என்பது நாளை தெரிந்து விடும் படம் மிரட்டலாக இருப்பதாகவும் லோகேஷ் சம்பவம் செய்துவிட்டார் எனவும் படத்தை பார்த்த பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள்.

 

Exit mobile version