லோகேஷின் தலை தப்பியதா… இதோ லியோ ட்விட்டர் விமர்சனம்.!

Leo twitter review ( லியோ திரைவிமர்சனம் )  :விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். மேலும் லியோ திரைப்படத்தை பலரும் கண்டு களித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அதில் அவர்கள் கூறியதாவது முதல் பாதி படம் மிரட்டல் ஆக இருந்ததாகவும் இரண்டாவது பாதி கொஞ்சம் ஸ்லோவாக போனது போல் கூறியுள்ளார்கள்.

மேலும் ஒரு ரசிகர் படம் சூப்பராக இருந்ததாகவும் நான் தல ஃபேன்ஸ் தான் ரொம்ப தெறிக்க விட்டுட்டாங்க என பேசி உள்ளார் அது மட்டும் இல்லாமல் நிறைய மைனஸ் சொல்லலாம் ஆனால் மக்கள் பார்த்துட்டு இருப்பாங்க படத்தோட சுவாரசியம் குறைந்துவிடும் அதனால் அது வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் எல் சி யு தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் ஒருவர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் ஸ்டோரி ஒரு தெளிவு கிடையாது எனக் கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் முதல் பாதியை 10 முறை 15 முறை பார்க்கலாம் எனவும் இரண்டாவது பாதி கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது போல் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் கடைசியாக கமலஹாசனின் வாய்ஸ் வருகிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் லியோ திரைப்படம் LCU எனவும் அமேசிங் ஃபிலிம் எனவும் அனிருத் மியூசிக் மிரட்டிவிட்டார் எனவும் கண்டிப்பாக இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைய வேண்டும் கூறியுள்ளார்.