லியோ ட்ரெய்லரில் இதை கவனித்தீர்களா.! குடையை வச்சி மறைச்சிட்டா எப்படி பாஸ் தெரியும்.?

Leo trailer priya anand : விஜய் நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது இதனை பல திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் எப்படி இருந்தாலும் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்பது தெரியும் ஆனால் எந்த அளவு ஆக்ஷன் இருக்கும் என சந்தேகத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் லியோ  ட்ரைலர் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்துள்ளது. ஆரம்பத்தில் லியோ ட்ரெய்லரில் விஜய் குட்டி கதை சொல்வது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் இதில் இரு வேடத்தில் நடித்திருப்பது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் லியோ தாஷை ரவுடிகள் துரத்துவது போல் காட்டப்பட்டுள்ளது.

ஊரை ஏமாற்றலாம்.. உலகத்தை ஏமாத்தலாம் ஆனா என்னை ஏமாத்த முடியாது.. லியோ பாணியில் ஆதாரத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை மிரட்டும் ப்ளூ சட்டை மாறன்.?

ஆனால் பிறகு லியோதாஸ் பார்த்தியை போல் இருப்பதால் ரவுடிகள் பார்த்தியை தொந்தரவு செய்ய ஆரம்பிக்கிறார்கள் இதனால் திரிஷாவும் இப்படியே ஓடி ஒளிஞ்சி தான் நாம் வாழ வேண்டுமா என்பது போல் கேட்க ஒரு கட்டத்தில் திரிஷாவிடம் விஜய் கெட்ட வார்த்தையில் பேசி அவனைப் போல் நான் இருப்பதால் என்னை தொந்தரவு செய்கிறார்கள் என அழுது கொண்டே கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் பாடத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத் ஊரை ஏமாற்றலாம் உலகத்தை ஏமாத்தலாம் என்னை ஏமாற்ற முடியாது என மிரட்டல் வசனம் பேசுகிறார். அதேபோல் அர்ஜுனும் நீ எங்க போனாலும் உன்னை விடமாட்டோம் அது உனக்கு தெரியாதா என்பது போல் பேசுகிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன், சஞ்சய்தத், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன் என அனைவரின் கதாபாத்திரமும் கெட்டப்பும் தெரிந்தது ஆனால் பிரியா ஆனந்த் கதாபாத்திரம் கெட்டப் என்ன என்பது தெரியாமல் இருந்தது.

மெகா ஹிட் படத்தின் ட்ரைலர் சாதனையை நெருங்க கூட முடியாத லியோ ட்ரெய்லர்.! ஜஸ்ட் மிஸ் தலைவா…

ஆனால் லியோ ட்ரெய்லரில் கொடையை வைத்து முகத்தை மறைப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும் அதில் பத்திரிக்கையாளர் பக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த் இருக்கிறார் ஒருவேளை பிரியா ஆனந்த் பத்திரிகையாளராக நடித்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

leo priya anand
leo priya anand