அஜித்திற்கு பயம் காட்டிய லியோ டீம்.! விரைவில் வெளியாகும் ஏகே 62 அப்டேட்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தனித்தனியே அவரவர்களுடைய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள். அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் அவர்கள் ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் டைட்டில் பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதைப் பார்த்து அஜித் எப்படியாவது அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று முழு வீச்சி திட்டம் திட்டி வருகிறார்.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் டைட்டில் பிரமோ வீடியோவை போல ஏகே 62 திரைப்படத்திற்கும் டைட்டில் வீடியோவாக வெளியிடலாம் என அஜித் அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக அஜித் அவர்கள் ஒரு படம் முடித்தவுடன் அடுத்ததாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஏகே 62 திரைப்படம் முடிந்தவுடன் வேர்ல்ட் டூர் செல்ல இருக்கிறார். இதனால் இந்த படத்த்தின் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு சில கண்டிஷன் போட்டு இருக்கிறாராம். அதாவது தீபாவளிக்குள் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இருக்கிறார்.

வந்த வாய்ப்பை எப்படியாவது தவறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இயக்குனர் மகிழ் திருமேனி கதையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் லியோ படத்தின் பிரமோ வீடியோவை பார்த்த அஜித் எப்படியாவது அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக சில மாற்றங்களை செய்து இருக்கிறாராம் அதாவது படத்தை கவனமாக எடுத்து முடியுங்கள் என்று இயக்குனரிடம் கூறியுள்ளாராம். இந்த படத்தை முடித்த பிறகு நான் வேர்ல்டு டூர் செல்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

இதனால் மகிழ் திருமேனி மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் ஏகே 62 திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கும் நிலையில் இந்த வாரத்திற்குள் ஏகே 62 திரைப்படத்தின் டைட்டில் உடன் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெறித்தனமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version